இலங்கை கடற்படையால் புதிய சுழியோடுதல் சாதனை

நீருக்கடியில் சுழியோடுதல் செய்வது ஒரு அற்புதமான அனுபவம் என்றாலும், சுழியோடுதல் ஒரு ஆபத்தான முயற்சியாகும். இந்த அபாயங்களுக்கு சவாலாக திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் யானை தீவுக்கு அருகில் ஆழ்கடலில் 100 மீட்டர் ஆழத்துக்கு சுழியோடி 2021 ஜூலை 17 ஆம் திகதி கட்டளை சுழியோடி அதிகாரி (கிழக்கு கடற்படை கட்டளை) கொமாண்டர் நிஷாந்த பாலசூரிய மற்றும் அவரது உதவியாலர் கடற்படை வீரர் (சுழியோடி) டப்டப்என்பி சந்தருவன் ஆகியோர் புதிய சாதனையொன்றை படைத்தனர். கடற்படை வரலாற்றில் இத்தகைய ஆழத்துக்கு சுழியோடிய முதல் நபர்களாக இவர்கள் வரலாற்றுக்கு சேர்ந்தனர்.

இந்த கடினமான சுழியோடி பதிவை அடைவது தற்செயல் நிகழ்வு அல்ல, பல மாத உடல் மற்றும் மன பயிற்சியின் இறுதி முடிவாகும். சுழியோடி ஆழத்தை படிப்படியாக அதிகரித்த இந்த ஜோடி மார்ச் 15 அன்று 73 மீட்டர் (242 அடி) ஆழத்துக்கு ஒரு சுழியோடி பயிற்சியையும், ஜூலை 13 அன்று 75 (246) அடி ஆழத்துக்கு மற்றொரு சுழியோடி பயிற்சியையும் மேற்கொண்டனர்.

2021 ஜூலை 17, அன்று 100 மீட்டர் ஆழத்திற்கு சுழியோடுதல் செய்யும் சவாலை வெற்றிபெற, கொமாண்டர் பாலசூரிய மூன்று வாயுக்கள், ஆக்ஸிஜன், ஹீலியம் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றைக் கலந்து, நீரில் மூழ்கக்கூடிய சுழியோடி கருவிகளைத் தயாரித்து சுழியோடி செய்யத் தயாரானார்.

அதன்படி,கொமாண்டர் நிஷாந்த பாலசூரிய மற்றும் அவரது உதவி சுழியோடியாளரும் யானை தீவுக்கு அருகே கடலில் 40 மீட்டர் வரை உதவி சுழியோடி குழுவின் உதவியுடன் சுழியோடத் தொடங்கினர். அங்கிருந்து, அவர்கள் படிப்படியாக ஆக்ஸிஜன், ஹீலியம் மற்றும் நைட்ரஜனை கலத்து, 100 மீட்டர் ஆழத்துக்கு சென்று கடினமான இலக்கை அடைந்து கடற்படை சுழியோடி பிரிவில் ஒரு புதிய பக்கத்தைத் திருப்பினர். சுழியோடிய ஆழத்தை கணக்கிட டிகம்பரஷ்ஷன் விளக்கப்படங்கள் (Decompression Charts) பயன்படுத்தப்பட்டன.

கடற்படை சுழியோடி நடவடிக்கைகளின் போது மூடிய-சுற்று சுய-கட்டுப்பாட்டு சுவாசக் கருவிகள் (close circuit SCUBA diving aperatures) உதவியுடன் 100% ஆக்ஸிஜன் வாயுவை சுழியோடும்நபர்களால் பயன்படுத்தப்படுகிறது. திறந்த சுற்று சுய-கட்டுப்பாட்டு சுவாசக் கருவிகள் (Open circuit scuba diving) மூலம் சுழியோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது சாதாரண சுருக்கப்பட்ட காற்று (normal compressed air) பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், முழுமையாக ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி (100% O2) சுழியோடும் அதிகபட்ச ஆழம் 18 மீட்டராக வரையறுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சுருக்கப்பட்ட காற்றைப் பயன்படுத்தி சுழியோடும் போது அதிகபட்சம் 55 மீ வரை சுழியோடுதல் சாத்தியமானதுடன் இந்த தூரம் சுழியோடும் போது நைட்ரஜன் நர்கோசிஸ் (Nitrogen Narcosis) மற்றும் ஆக்ஸிஜன் நச்சுத்தன்மை (Oxygen Toxicity) ஆகிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. 1964 முதல், கடற்படை சுழியோடி நபர்கள் 55 மீட்டருக்குள் சுழியோடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதுடன் அந்த வரம்பை மீறி இந்த சாதனை படைத்த சுழியோடி நடவடிக்கை பயிற்சி கடற்படை சுழியோடி பிரிவுக்கும் கடற்படைக்கும் மிகப்பெரிய சாதனையாகும்.

இங்குள்ள சிறப்பு என்னவென்றால், சுழியோடி ஜோடி தானாக முன்வந்து இந்த மிகவும் ஆபத்தான 100 மீட்டர் சுழியோடி சவாலை வெற்றி பெறுவதாகும். அவர்களின் தொழிலின் எல்லைகளைத் தாண்டி அவர்களின் தொழில்முறை அறிவு மற்றும் திறன்களை நன்கு பிரதிபலித்தி பெற்ற இந்த சாதனை சுழியோடி பிரிவில் உள்ள மற்ற மாலுமிகளுக்கு மட்டுமல்ல, முழு கடற்படைக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகும். தனது தொழில்முறை வரம்புகளுக்குள் பணியாற்றுவது மட்டுமல்லாமல், சவால்கள் எதிர்கொள்ளும் தைரியம், இடைவிடாத முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு மூலம் செயல்படுதல் கடற்படைக்கு மகத்தான புகழைப் பெற்று குடுத்துள்ளது.

100 மீட்டர் ஆழத்துக்கு சுழியோடி உலகுக்கு தங்கள் திறன்களை வெளிப்படுத்திய இந்த சுழியோடி நபர்கள் பல மாதங்களாக தங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர்ந்து அதிக அர்ப்பணிப்புடன் பயிற்சியளித்து, தங்கள் சொந்த சாதனையை புதுப்பித்து, அதிக ஆழத்திற்கு சுழியோடி கடற்படையின் நற்பெயரை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் நாள் விரைவில் வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.