கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று எப்பாவல சிரி சம்புத்த வீரசிங்ஹாராம விஹாரயவில் திறந்து வைக்கப்பட்டது

கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக, வட மத்திய மாகாணத்தின் துணைத் தலைமைத் தலைவரான புனிதபாத பன்வில குனரத்ன நாயக்க தேரரின் வேண்டுகோளின் படி, பண்டுகலம சிரி சம்புத்த விஹாரயவுக்கு இணைந்த ரொடவெவ,எப்பாவல சிரி சம்புத்த வீரசிங்ஹாராம விஹாரய வளாகத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவின் நிதியுதவியால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் 2021 ஜூலை 17 அன்று திறந்து வைக்கப்பட்டன.

எப்பாவல சிரி சம்புத்த வீரசிங்ஹாராம விஹாரய உட்பட அப் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக நிறுவப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வுக்காக வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் மற்றும் சேவா வனிதா செயற்குழு உறுப்பினர் திருமதி கங்கா டயஸ், சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர் (கடற்படை சமூக பணி) திட்டங்கள், கேப்டன் டபிள்யூ.எல்.என் குணசேகர உட்பட மூத்த அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா பிரிவின் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.