கடற்படை போர்வீரர்களை நினைவுகூரும் தொடர் நிகழ்ச்சிகள்

12 வது தேசிய போர் வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, கடற்படை போர் வீரர்களை நினைவுகூரும் விழாவொன்று வெலிசரவுள்ள கடற்படையினர் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் 2021 மே 19 ஆம் திகதி இடம்பெற்றதுடன் மேலும், கடற்படை வீரர்களை நினைவுகூரும் வகையில் கடற்படை கட்டளையில் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

அதன்படி, 2021 மே 18 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட போர் வீரர்களை நினைவுகூரும் விழா வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்திலும், தென்கிழக்கு கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த போர் வீரர்களை நினைவுகூரும் விழா அம்பார, முவன்கல பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவுச்சின்னம் அருகிலும் இடம்பெற்றது. மேலும், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமில் மற்றும் 4 வது துரித தாக்குதல் படகு படைத் தலைமையகத்திலும் போர் வீரர்களின் நினைவுகூரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதேபோல், தெற்கு கடற்படை கட்டளை மூலம் கடற்படை வீரர்களை நினைவுகூரும் விதமாக 2021 மே 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் காலி, மாகாலி பகுதியில் உள்ள சம்போதி சிறுவர் இல்லத்தில் குழந்தைகளுக்கு மற்றும் ஊழியர்களுக்கு மதிய உணவை வழங்கப்பட்டதுடன் ஹம்பந்தோட்டை ஸ்ரீ குணானந்த பிரிவெனவில் மகா சங்க உறுப்பினர்களுக்கு தானம் மற்றும் பிரிகர வழங்கப்பட்டது.

கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வுகளுக்காக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கடற்படை வீரர்கள் பங்கேற்றனர்.