தேசிய போர்வீரர்களின் நினைவு விழா அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றது

2021 ஆம் ஆண்டு தேசிய போர்வீரர்களின் நினைவு விழா, முப்படைகளின் சேனாதிபதி, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (2021 மே 19) பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த ஆண்டு விழா ரணவீரு சேவா ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் நாட்டின் பறவும் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, மிகவும் தேவையான பணியாளர்களின் பங்கேற்புடன் இந்த விழா நடத்தப்பட்டது. அதன்படி, கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள், அட்மிரல் ஒப் த ப்லிட் வசந்த கரண்னாகொட, மார்ஷல் ஒப் த எயார் போஸ் மற்றும் மேற்கு மாகாண ஆளுநர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக, பாதுகாப்புத் தலைமை பிரதானி மற்றும் இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள், போரின் போது இறந்த மற்றும் காணாமல் போன போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அழைப்பாளர்கள் இந் நிகழ்வில் கழந்துகொண்டனர்.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை தாய்நாட்டிலிருந்து ஒழிப்பதன் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தேசிய போர்வீரர்களின் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

அதன்பிறகு கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அட்மிரல் ஒப் த ப்லிட் வசந்த கரண்னாகொட, மார்ஷல் ஒப் த எயார் போஸ் மற்றும் மேற்கு மாகாண ஆளுநர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரால் (ஓய்வு) கமல் குனரத்ன, பாதுகாப்புத் தலைமை பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன, பொலிஸ் மா அதிபர் சீ.டீ விக்கிரமரத்ன, ரணவீரு சேவா அதிகார சபையின் துனை தலைவி உள்ளிட்ட பிரமுகர்களுடன் உயிர் நீத்த படையினரின் நெருங்கிய உறவினர்கள், நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.