ஹரித டிவி தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கும் விழாவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

கொழும்பு, ஹுனுப்பிட்டிய – கங்காராம விகாரையில் இயங்கும் ஶ்ரீ ஜினரத்ன கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி அலைவரிசையின் தொடக்க ஒளிபரப்பு இன்று (2021 மார்ச் 31) அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

விவசாய தகவல்கள் உள்ளிட்ட எதிர்கால சௌபாக்கிய திட்டம் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த புதிய அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஹுனுப்பிட்டிய – கங்காராம விகாரையின் தலைமை தேரர் வண கலாநிதி கிரிந்தே அச்சஜி தேரரின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஹரித டிவி தொலைக்காட்சி அலைவரிசையின் இரண்டு மாடி செயல்பாட்டு அறை கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளும், அதன் மூன்று மாடி நிர்வாக அறை கட்டிடமும் தற்போது கடற்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டிட வளாகத்தை நிர்மாணிக்கும் வரை தொலைக்காட்சி அலைவரிசைக்கு தொடர்ந்து ஒளிபரப்ப ஒரு தற்காலிக இடம் ஹுனுப்பிட்டிய – கங்காராம விகாரையில் கடற்படையினரால் நிர்மானிக்கபட்டது. அதன்படி இன்று அந்த இடத்திலிருந்து ஹரித டீவியின் தொடக்க ஒளிபரப்பை அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் புனித மகா சங்க உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைவர் மற்றும் இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.