இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தால் 78 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன

இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பானம கடலாமை பாதுகாப்பு மையம் மூலம் 78 கடலாமை குட்டிகள் 2021 பிப்ரவரி 21 அன்று கடலுக்கு விடுவிக்கப்பட்டன.

அழிந்து போகும் அபாயத்தில் உள்ள கடலாமை இனங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் பல்லுயிரியலைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் முதன்மை நோக்கத்துடன் கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டமொன்று மேற்கொண்டு வருகிறது. அதன் படி, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பானம கடலாமை பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்ட கடலாமை முட்டைகளினால் வெளியே வந்த 78 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிப்பு தென்கிழக்கு கடற்படை கட்டளையின் துனைத் தளபதி கொமடோர் நெவில் உபயசிரியுடயை மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.