கடற்படையால் கட்டப்பட்ட மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

சிறுநீரக நோயை நாட்டிலிருந்து அகற்றுவதற்கான தேசிய முயற்சில் இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் படி இந்த சமூக பொறுப்புணர்வு முயற்சியின் மற்றொரு திட்டமாக, அம்பாரை ஹுலன்னுகே பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 787 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் 2020 டிசம்பர் 16 ஆம் திகதி பொது மக்களின் பயன்பாட்டிற்காக கடற்படையால் திறந்து வைக்கப்பட்டது.

சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சகத்தின் தலைமையில் கடற்படையின் உதவியுடன் அம்பாரை ஹுலன்னுகே பகுதியில் கட்டப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் ஹுலன்னுகே கல்லூரி மாணவர்களின் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களின் பாதுகாப்பான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படும்

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜெயந்த கமகே மற்றும் லாகுகல உதவி பிரதேச செயலாளர் புதிதாக கட்டப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் இலங்கை கடற்படைக் கப்பல் மஹாநாகவின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள், ஹுலன்னுகே கல்லூரியின் மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கலந்து கொண்டனர்.