திருகோணமலை கடலுக்கு அடியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கடற்படை பங்களிப்பால் அகற்றப்பட்டது.

நீருக்கடியில் சேகரிக்கப்பட்ட பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டமொன்று 2020 நவம்பர் 2, அன்று திருகோணமலை கடல் பகுதி மையமாக கொண்டு கடற்படையால் மேற்கொள்ளப்பட்டன.

பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கழிவுகளை கவனக்குறைவாக கொட்டுவதால் கடல் சுற்றுச்சூழல் மற்றும் அதன் பல்லுயிர் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க தீவைச் சுற்றியுள்ள கடற்கரையை சுத்தம் செய்வதில் கடற்படை தொடர்ந்து பங்களித்து வருகிறது. அதன்படி, திருகோணமலை கோனேஸ்வரம் முதல் திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனை வரை கடற்கரையில் கவனக்குறைவாக பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கழிவுகளை கொட்டுவதால் கடலோர கடல் சூழலை சுத்தம் செய்ய கிழக்கு கடற்படை கட்டளை இந்த குறிப்பிட்ட திட்டத்தை மேற்கொண்டது.

இங்கு கடற்கரைக்கு அருகே கடலில் குவிந்து மிதந்த பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் உள்ளிட்ட பெரிய அளவிலான குப்பைகளை அகற்ற முடிந்தது, இதனால் கடலோர சுற்றுச்சூழல் அமைப்புக்கு சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

மேலும், கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு சுழியோடி குழு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது, இதற்கு திருகோணமலை காவல்துறையும் உதவியது.