இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் புதிதாக கட்டப்பட்ட அதிகாரி இல்லம் திறக்கப்பட்டது

திருகோணமலை தெற்கு சாம்பூர், இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் புதிதாக கட்டப்பட்ட அதிகாரி இல்லம் இன்று (2020 ஆகஸ்ட் 12) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

விதுர நிருவனத்தில் மற்றும் மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் அதிகாரிகளின் தங்குமிட வசதிகளை விரிவுபடுத்துவதற்காக இந்த இரண்டு மாடி கட்டிடத்தின் கட்டுமானம் 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதுடன் கிழக்கு கடற்படை கட்டளை சிவில் பொறியியல் துறையால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, குறுகிய காலத்தில் இந்த திட்டத்தை முடித்தமைக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படை தளபதி மரைன் படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் ஒரு தேங்காய் மரக்கன்று நட்டார், மேலும் படைப்பிரிவின் பயிற்சி நிர்வாக அதிகாரி கடற்படைத் தளபதியிடம் நினைவுச் சின்னமொன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி, பணிப்பாளர் நாயகம் வழங்கள் மற்றும் சேவைகள், இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தின் மற்றும் கடற்படை மரைன் படைப்பிரிவு தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.