சதுப்பு நில மரங்களை வெட்டியதற்காக நான்கு பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்

ஜூலை 18, 2020 அன்று மன்னார் திருகேதீஸ்வரம் பகுதியில் கடற்படை நடத்திய ரோந்துப் பணியின் போது, சதுப்பு நில மரங்களை வெட்டும்போது நான்கு பேர் கடற்டையினரால் கைது செய்யப்பட்டனர்.

மன்னாரில் உள்ள திருகேதீஸ்வரம் பகுதியில் ரோந்துப் பணியின் போது, திருகேதீஸ்வரம் பகுதியில் உள்ள சதுப்பு நில மரங்களை வெட்டிய 4 நபர்களை வடமத்திய கடற்படைத் தளத்துடன் இணைந்த கடற்டையினர் குழு கைது செய்தனர். ஒரு டிராக்டர், ஒரு மோட்டார் பைக், ஒரு செயின்சா, 02 கத்திகள் மற்றும் வெட்டப்பட்ட மெஸ்கைட் மரங்களின் சுமார் 60 கட்டைகள் கடற்படை காவலில் வைக்கப்பட்டன.

சந்தேக நபர்கள் மன்னாரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.மேலதிக விசாரனைக்கு சந்தேக நபர்கள் வான்காலை போலீசாரிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.