ஜப்பானிய கடற்படை கப்பல்கள் இலங்கை வருகை
 

ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்பு கடற்படைக்கு சொந்தமான "காகா" மற்றும் “இனசுமா” ஆகிய கப்பல்கள் ஐந்து நாள் உத்தியோக நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (செப்டெம்பர், 30) இலங்கை வந்தடைந்துள்ளன. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இரு கப்பல்களையும் இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

400 கடற்படை சிப்பாய்களுடன் சுமார் 19,950 டோன்களை எடுத்துச்செல்லக்கூடிய "காகா" எனும் கப்பல் 248 மீட்டார் நீளம் கொண்டதாகவும் மற்றும் 170 கடற்படை சிப்பாய்களுடன் சுமார் 4,550 டோன்களை எடுத்துச்செல்லக்கூடிய “இனசுமா” எனும் கப்பல் 151 மீட்டார் நீளம் கொண்டதாகவும் காணப்படுகின்றன.

இலங்கையில் தரித்திருக்கும்வேளையில் இரு கப்பல்களிலுமுள்ள சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து விளையாட்டு நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ்விரு கப்பல்களும் எதிர்வரும் 04ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்பட உள்ளன.