மேலும் 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத் திட்டங்களின் மற்றொமொரு சமூக நலத் திட்டமாக சிறுநீரக நோய் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கும் நோக்கத்தின் வவுனியா பகுதியில் கொக்எலிய இராணுவ முகாம் வளாகத்தில், முன்டிமுருப்பு மூன்றாம் கமாண்டோ ரெஜிமென்ட் வளாகத்தில் மற்றும் மஹமய்லன்குழம் பகுதியில் நிருவப்பட்டுள்ள 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நேற்று (ஜூலை 29) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்காக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது இதன்பிரகாரமாக நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் அப் பகுதியில் 750 குடும்பங்களும் இராணுவ முகாம் வளாகத்தில் 1600 இராணுவ வீரர்களும் சுத்தமான குடிநீர் வசதி பெருகின்றனர்

கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி மக்களுக்கு சுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுகின்றன. இது வரை 239 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 114,766 குடும்பங்களுக்கு மற்றும் 80,185 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளதாக குறிப்பிடத்தக்கது.