வெள்ள கட்டுப்பாடு மற்றும் நீர் மேலாண்மை மையத்தின் கட்டுமானங்கள் தொடற்கும் நிகழ்வுக்கு கடற்படை தளபதியின் பங்கேற்பு
 

இலங்கை காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் மேற்கொன்டுள்ள வெள்ள கட்டுப்பாடு மற்றும் நீர் மேலாண்மை மையத்தின் கட்டுமானகள் தொடற்கும் நிகழ்வு நேற்று (28) மாநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் கெளரவ சம்பிக்க ரணவக்க தலைமையில் நாரஹேன்பிட்ட பால் வாரியம் திருவில் நடைபெற்றது.குறித்த நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களும் கழந்துகொன்டார்.

400 மில்லியன் ரூபாய் செலவில் கட்டுமான நடவடிக்கைகள் தொடங்க உள்ள குறித்த மையத்தின் கட்டுமான நடவடிக்கைகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. இது மூலம் மழையளவு, வெள்ள அபாயம் மற்றும் வெள்ள நீர் ஆபத்துகள் பற்றிய துல்லியமான விபரங்கள் பொதுமக்களுக்குத் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளத்தால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதற்கு மற்றும் பல உயிர்களும் சொத்துக்களும் காப்பாற்ற குறித்த மையம் நிருவப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுக்காக மதிப்பிற்குரிய துறவிகள், தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்கள், இலங்கை காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தளபதி அசேல இத்தவல அவர்கள், மாநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமச்சில் மற்றும் இலங்கை காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சிரெஷ்ட அதிகாரிகள், கடற்படையின் சிரெஷ்ட அதிகாரிகளும் கழந்துகொன்டனர்.