கோட்டே பகுதியில் கால்வாய்கள் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினரின் உதவி
 

கோட்டே,பெத்தகான கால்பந்தாட்ட மைதானம் அருகில் உள்ள கால்வாய்கள் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் நேற்று (27) உதவியழித்துள்ளது. இந்த நாட்களில் மழை வானிலை உடன் சாக்கடைச்சேறு, கழிவுநீர் சேகரித்து உள்ளனால் குறித்த கால்வாய்கள் நீர் செல்ல முடியாத நிலையில் இருந்தது.

மிக மோசமான நிழயில் உள்ள கால்வாய் மூலம் அப் பகுதியில் இனப்பெருக்க நோய் ஆபத்து ஏற்பட்டது. குறித்த நிலைமை உடனடியாக கன்டுபிடித்த கடற்படையினர் கால்வாய் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளனர்.குறித்த பணிக்காக 50 கடற்படையினர் கழந்துகொன்டனர்.

மேலும் 3 கிலோ மிட்டர் நீளமான கால்வாய் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இலங்கை காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் அகழ்எந்திர இயந்திரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்தத்தில் குறித்த கால்வாய்கள் மோசமடைந்தது.

எதிர் காலத்தில் வெள்ளத்தால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதற்கு கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்புரைக்கமைய அறிவுறுத்தல்களின் கீழ் கடற்படையினர் தற்போது பல நடவடிக்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த திட்டம் அதின் மற்றொரு திட்டமாகும்.