நிவாரணப் பொருட்களுடன் மூன்று சீன கடற்படைக் கப்பல்கள் கொழும்பு வருகை
 

சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான “சாங் சுன்”,”ஜிங்சௌ”, “சஓ ஹு” ஆகிய கப்பல்கள் நிவாரணப் பொருட்கள் சகிதம் நேற்று (மே, 31) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. குறித்த இக்கப்பல்கள் வெள்ளத்தினால்பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளுக்கு மேலும் உதவியளிக்கும் வகையில்இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

குறித்த இம் மூன்று கப்பல்களும் இலங்கைக்கு நல்லெண்ணவிஜயத்தினை மேற்கொள்ள தீர்மானித்திருந்ததாகவும் எனினும் நாட்டில் நிலவும்அசாதாரண நிலை காரணமாக தனது விஜயத்தினை பாதிக்கப்பட்ட மக்களுக்குநிவாரணமளிக்கும் விஜயமாக மாற்றிக்கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்குமருத்துவ வசதிகளை வழங்குவதற்காக 10 சிறிய படகுகளும் ஐந்து மருத்துவகுழுக்களும் வருகை தந்துள்ளன. இவர்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்துநிவாரண மற்றும் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த கப்பல்களின் கட்டளை அதிகாரிகளாக கேப்டன் ஹு ஜய், கேப்டன் வோங் ஹய்க்பின் மற்றும் ஷேவ் பொஜுன் ஆகிய அதிகாரிகள் இருகின்றன. “சாங் சுன்”கப்பலில் 100 அதிகாரிகளுடன் 200 வீர்ர்களும் ஜிங்சௌவ் கப்பலில் 50 அதிகாரிகளுடன் 178 வீர்ர்களும் சஓ ஹு கப்பலில் 54 அதிகாரிகளுடன் 133 வீர்ர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளன.

வந்தடைந்த கப்பல்களில் கட்டளை அதிகாரிகள் மேற்கு கடற்படை பிரிவின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆட்டிகல அவர்களை சந்தித்தனர்.அங்கு அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுக்கபடுகின்ற அடுத்த நடவடிக்கைகள் பற்றி மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகள் பற்றி நட்பு அரட்டைகளின் ஈடுபட்டனர்.இன் நிகழ்வுக்களுக்காக சீன மக்கள் குடியரசின் இலங்கையின் தூதர் அதிமேதகு திரு சியான் லியன் அவர்கள்,கடற்படை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பல நபர்கள் கழந்துகொன்டனர்.

மேலும், இவ்வருகையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காகசீன அரசாங்கத்தினால் அளிக்கப்பட பெருமளவிலான நிவாரணப் பொருட்கள் வைபவரீதியாக கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களிடம்கையக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.