மூலோபாய கடல்சார் பங்களிப்புக்களை வளர்த்தலுடன் காலி கலந்துரையாடல் 2016 வெற்றிகரமாக முடிவுற்றது
 

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள காலி கலந்துரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாடு நேற்று (29) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் வெற்றிகரமாக முடிவுற்றது. மூலோபாய கடல்சார் பங்களிப்புக்களை வளர்த்தல் என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த ஆண்டு மாநாட்டுக்கு 41 நாடுகளில் 12 சர்வதேச நிறுவனங்களிள் 130 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

கடற்படை அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆண்டுதோறும் ஏற்பாடுசெய்யும் காலி கலந்துரையாடல் பிராந்திய கடல்சார் பங்காளித்துவத்தை மற்றும் உலக மட்டத்தில் பொதுவான கடல்சார் சவால் தீர்வுகளை ஆலோசிக்கிரதை பிரதான நோக்கமாக நடைபெற்றது. உலக கடல்சார் இணைப்புகளை வலுப்படுத்துவதுக்கு மிகவும் முக்கியமான காரனங்கள் பற்றி அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த இந்த ஆண்டு மாநாட்டில் முடின்தது.

இங்கே வந்த நிபுணர்கள் மூலம் பின்வரும் விரிவுரைகள் வழங்கப்பட்டது.

• கடலோரப் பாதுகாப்பு புதிய கருத்துகளுடன் நிறுவ வேண்டும் மற்றும் முக்கிய மூலோபாய கடற்படை உறவுகள் நிறுவ வேண்டும் - சீன மக்கள் கடற்படையில் பணியாளர்களின் தளபதியின் உதவி அதிகாரி ரியர் அட்மிரல் வான் டச்டஹோன்க் அவர்கள்

• வெற்றிகரமான மூலோபாய கடல்சார் உறவை உறுவாக்க வேன்டிய திறன்களை வலுப்படுத்துவதில் முக்கியத்துவம் - ஜப்பனீஸ் கடல்சார் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் செயற்பாடுகள் மற்றும் திட்டமிடல் ரியர் அட்மிரல் ரியோ சகாய் அவர்கள்

• மூலோபாய கடல்சார் இணைப்புகளை செய்யும் போது சந்திக்க வேன்டிய சவால்கள் - பாக்கிஸ்தான் கடற்படை துவக்கவும் கட்டளை தளபதி வைஸ் அட்மிரல் சயீத் அரிப்உல்லா ஹுசெய்னி அவர்கள்

• இந்து-ஆசிய பசிபிக் பகுதியில் ஒளிபரப்பாக இருக்கும் கரையோரப் பாதுகாப்பு உறவுகள் வகை - ஐக்கிய இராச்சிய கடல் கொள்கை பற்றிய கார்பெட் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் ஜெஃப்ரி டில் அவர்கள்

• கடல்சார் உறவுகள் மற்றும் ஒற்றுமையாக செயல்படுவதின் முக்கியத்துவம் - ஆஸ்திரேலிய கடற்படையில் எல்லைகள் பொறுப்பு அதிகாரி ரியர் அட்மிரல் பீட்டர் லேவர் அவர்கள்

• இந்து-பசிபிக் கடல் உறவுகளை வளர்ப்பதல் - புது தில்லி, தேசிய கடல்சார் அறக்கட்டளத்தில் இயக்குனர் கலாநிதி விஜய் சகுஜா அவர்கள்

• ஆசியாவில் ஏற்படும் கடற்கொள்ளையை மற்றும் கப்பல்களுக்கு எதிரான ஆயுத கொள்ளை தடுக்க பிராந்திய ஒத்துழைப்பு மேம்படுத்தல் - ஆசிய கப்பல்கள் கடற்கொள்ளையர்கள் மற்றும் ஆயுத கொள்ளையர்களுடம் பாதுகாக்கும் பிராந்திய ஒத்துழைப்பு கருத்துக்களம் தகவல் பரிமாற்றம் நிலையத்தின் சிரேஷ்ட முகாமையாளர் திரு தூன் கா லியோன்க் அவர்கள்

• உலகளாவிய வள பாதுகாப்பு, கடற்படை ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் ஆளுகை பற்றி ஐரோப்பிய பார்வை - ஜெர்மன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஆன்ட்ரியாஸ் கிரெளவ்ஸ் அவர்கள்

• ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான நெதர்லாந்து ராயல் கடற்படை பார்வை - நெதர்லாந்து ராயல் கடற்படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராப் வர்கக்

• ஒத்துழைப்பு மற்றும் மோதல் இந்து-பசிபிக் கடல் பிராந்தியத்தில் காண முடியும் உண்மை - கடல்சார் படைகள் பசிபிக் தலைமையகத்தில் பன்னாட்டு உறவுகள் சிறப்பு ஆலோசகர் கலாநிதி ஜேம்ஸ் ஏ பூடிலியர் அவர்கள்

• இந்து-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் கடல்சார் ஒத்துழைப்பு – கடற்படை ஆய்வாளர் நிலையத்தின் ஆய்வாளர் திருமதி நிலந்தி சமரனாயக

• தென்கிழக்கு ஆசியாவின் மூலோபாய கடல்சார் உறவுகள், மலேசிய ராயல் கடற்படை பார்வை - மலேசிய கடற்படை துணைத் தலைவர், திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி பணியாளர்கள், ரியர் அட்மிரல் சயீத் சஹிருடீன் புத்ரா அவர்கள்

• கொள்கை அடிப்படையிலான உலகளாவிய கடற்படை கட்டளை நன்மைகள் - சர்வதேச நாணய நிதியம் மற்றும் கிழக்கு ஆசியா பிராந்திய ஒருங்கிணைப்பாளர். திருமதி ஜாசபின் உரென்சா

• மூலோபாய கடல்சார் இணைப்புகளை உருவாக்குவது “விமர்சன ஆய்வை” - இந்திய ஐக்கிய சேவைகள் நிறுவனம் பணிப்பாளர் லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) பிக் கே சிங் அவர்கள்

• கடலில் நடக்கும் கடல்சார் குற்றங்களை தடுக்க பயனுள்ள கடல் இணைப்புகளை கவனம்செலுத்துவது மற்றும் இப் பகுதிகள் மறைப்பதல். – மருந்துகள் மற்றும் குற்றங்கள் பற்றி ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் உலகளாவிய கடல் குற்றங்கள் நிகழ்ச்சியின் தலைவர் ஆலன் கோல் அவர்கள்

• மூலோபாய உறவுகள் மற்றும் அகதிகள் ஐந்து ஐக்கிய நாடு உயர் சபையின் கட்டுப்பாடுகளை செயல்படுத்தல் - அகதிகள் ஐந்து ஐக்கிய நாடு உயர் சபையின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி திரு இகோர் இவென்செக் அவர்கள்

• கடற்படை உறவுகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க, மேற்கு இந்தியப் பெருங்கடல் வகை - தென் கிழக்கு ஆசியா, ஆய்வுகளின் அடிப்படையில் மேலாளர் ஜெஃப்ரி எஸ் பேன் அவர்கள்

அட்மிரல் (ஓய்வு) கலாநிதி ஜயநாத் கொலபகே அவர்கள் இப் கருத்தரங்கில் விமர்சனம் விரிவுரை நடத்துனார். இரண்டு நாள் மாநாடு விரிவுரையில் சில விஷயங்களை ஆய்வு மேற்கொண்டபட்டது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏப்பாடுசெய்யபட்ட ஏழாவது சர்வதேச கடல் மாநாடு நாடுகள் மற்றும் கடற்படை கடல்சார் இடையே உறவுகளை மேம்படுத்த முக்கியமான இடம் எடுக்கும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதாரம் வேகமாக வளரும் இந்த நேரத்தில் பாரம்பரிய அல்லாத பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதே சுட்டிக்காட்டினார். இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் மூலோபாய கடல் பாதுகாப்பு பற்றி சிக்கல்கள் உருவாகிகிரது என்று அவர் மேலும் கூறினார்.

காலி கலந்துரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாட்டில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் கடற்படை நடவடிக்கை ரியர் அட்மிரல் தர்மேந்திர வேத்தேவ அவர்கள் மூலம் மாநாட்டில் நன்றி பேச்சு நடத்தினார். ஆண்டுதோறும் நடைபெறும் இப் மன்றம் மூலமாக மூலோபாய கடல்சார் இணைப்புகளை உருவாக்குவது சம்பந்தமாக கட்டுமான, விரிவாக்கம் பற்றிய விவாதங்கள் மற்றும் பகுப்பாய்வு புதிய பாதைக்கு வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இப் மாநாட்டுக்கு இராணுவத் தளபதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பங்கு பெற்றது பெரிதும் பாராட்டிய ரியர் அட்மிரல் வேத்தேவ அவர்கள் இப் வாய்ப்பை அர்த்தமுள்ளமாக்கிய பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அவருடய அர்த்தமுள்ள பேச்சு மற்றும் பங்கேற்புக்கு தனது கெளரவமான நன்றியைத் தெரிவித்தார். இந்த மாநாடு நடத்த வாய்ப்பு வழங்கிய பாதுகாப்பு அமைச்சுக்கும், இந் நிகழ்வுக்கு கலந்து கொண்ட அமைச்சர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், அவரது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்தார்

மேலும், இப் மாநாட்டில் பங்குபெற்ற மற்றும் அதுக்காக ஊக்கம் குடுத்த உள்ளூர்,வெலிளூர் பிரதிநிதிகள், நிறுவனங்கள் அமைப்புகளின் கல்வியாளர்களுக்கு தனது கெளரவமான நன்றியைத் தெரிவித்த ரியர் அட்மிரல் வேத்தேவ அவர்கள் கடல்வழி இணைப்புகளை பராமரிக்க அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விருப்பம் எல்லோருக்கும் பாதுகாப்பான நாளை தினம் கடல் பாதுகாப்பில் ஒரு ஸ்திரத்தன்மை என்று கூறினார்.

சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் இந்த மாநாட்டில் வெற்றிக்கு குடுத்த பங்களிப்பு மற்றும் பல சிக்கலான பிரச்சினைகள் தீர்த்து விட முடியும் அவர்கள் அறிவு இந்த உலக பொது நன்மைக்காக பயன்படுத்த முடியும் என்று கூறினார். மேலும், கடற்படை காலண்டரில் முதன்மையான இடத்தை பெறும் சர்வதேச கடல் மாநாடு தொடர்ச்சியாக பராமரிக்க படும் என்று வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு மாநாட்டில் கழந்துகொன்ட மற்றும் அதுக்கு வலிமை குடுத்த அனைத்து கட்சிகளுக்கும் கடற்படைத் தளபதி ஐந்து தன்னுடைய நன்றியை தெரிவித்தார். மேற்கு கப்பற்படை கட்டளயின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா அவர்கள் மற்றும் தெற்கு கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்கள் உட்பட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் அர்ப்பணிப்பு மற்றும் திறமையாக வேலைசெய்த சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட வீர்ர்களுக்கும் கடச்சியாக தன்னுடைய நன்றியை தெரிதித்தார். அதன்படி, 2 நாட்கள் நடைபெற்ற காலி கலந்துரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாடு 2017 காலி கலந்துரையாடலில் மறுபடியும் சந்திக்கும் நம்பிக்கையுடன் வெற்றிகரமாக முடிவுற்றது.