சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 29) இரு வேறு சந்தர்ப்பங்களின் கைதுசெயயப்பட்டனர். அதற்கமைய, கதிரவெளி கடற்கரை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 8 நபர்கள் கிழக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட வாகரை கடற்படை கப்பல் காசியப்ப வின் வீரர்களால் கைது செய்யப்பட்டனர். அத்தோடு அவர்களால் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட 2 கண்ணாடியிழை படகு மற்றும் ஒரு தனியிலை மீன்பிடி வலை என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. கைதுசெயயப்பட்டவர்களும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் வாகரை பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியதிற்குட்பட்ட நாச்சிக்குடா, கடற்படை கப்பல் புவனேக வின் வீரர்களினால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 2 மீனவர்கள் ஒரு பாரம்பரிய வல்லத்துடனும் ஒரு தனியிலை மீன்பிடி வலையுடனும் படைத்துறை கடற்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களும்